தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிய உச்சத்தைத் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை + "||" + Corona continuously increasing in India; Number of cases touching new highs

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிய உச்சத்தைத் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; புதிய உச்சத்தைத் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. 

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 10 ஆயிரத்து 319- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 862- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 01 லட்சத்து 98 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை 11-வது சுற்று பேச்சுவார்த்தை - அடுத்தகட்ட படை வாபஸ் குறித்து ஆலோசனை
லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே நாளை (வெள்ளிக்கிழமை) 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட படை வாபஸ் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடக்கிறது.
2. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 791 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஒடிசாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,44,647 ஆக அதிகரித்துள்ளது.
3. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,136 ஆக உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வால் தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தகவல்
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்திற்கான சர்வதேச கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.