மாநில செய்திகள்

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு + "||" + Streets inhabited by Corona residents in Madurai will be closed from today - Corporation Notice

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு

மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாந்கராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மதுரையில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 58 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 15 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 707 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 50-க்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது 700-ஐ கடந்து அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை மக்கள் கடுமையான அச்சத்தில் இருக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல, அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக வார்டுகள் அமைக்கும் பணியும் நடக்கிறது.

மதுரையில் கடந்த 10 நாட்களில் அதாவது 29-ந்தேதி 32 பேரும், 28-ந்தேதி 39 பேரும், 30-ந்தேதி 48 பேரும், 31-ந்தேதி 44 பேரும், 1-ந்தேதி 48 பேரும், 2-ந் தேதி 105 பேரும், 3-ந் தேதி 66 பேரும், 4-ந்தேதி 58 பேரும், 5-ந்தேதி 88 பேரும், 6-ந்தேதி 120 பேரும் என மொத்தம் 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், கடந்த 10 தினங்களில் 203 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 6 பேர் உயரிழந்துள்ளனர்.

மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகம் உள்ளது - ஆதார் பூனவல்லா
வெளிப்படையாகச் சொல்வதானால் தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகம் உள்ளது என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.
2. நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை - மத்தியமந்திரி ஹர்ஷ் வர்தன் விளக்கம்
நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் -சுகாதார அமைச்சகம் விளக்கம்
கொரோனா தடுப்பூசி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்பதுடன் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறது என்பதற்காக போடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
4. நடிகர் அக்‌ஷய் குமாரை தொடர்ந்து அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா தொற்று
இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை செயலர்
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.