தேசிய செய்திகள்

இருந்த 2 எம்.எல்.ஏக்களும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர்; சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி! + "||" + TDPs presence in Telangana Assembly ends as MLAs join TRS

இருந்த 2 எம்.எல்.ஏக்களும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர்; சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி!

இருந்த  2  எம்.எல்.ஏக்களும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தனர்;  சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி!
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தால் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்தார்.
ஐதராபாத்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு, அண்டை மாநிலமான தெலங்கானாவில் இரண்டு எம்.எல்.ஏக்கள் இருந்து வந்தனர். அந்த எம்.எல்.ஏக்கள் இருவருமே அக்கட்சியில் இருந்து விலகி தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகரின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தனர். மெச்சா நாகேஸ்வர் ராவ் மற்றும் சந்திரா வெங்கட வீரைய்யா ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்களும் சந்திரசேகர் ராவ் முன்னிலையில் அக்கட்சியின் சட்டமன்ற குழுவில் இணைந்துள்ளனர்.

தெலங்கானாவில் ஏற்கனவே தனது பலத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சி, 2018ம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்றது. கம்மம் மாவட்டத்தில் உள்ள அஸ்வரோபேட்டா மற்றும் சத்துப்பள்ளி ஆகிய இரண்டு தொகுதிகளில் வென்றிருந்த எம்.எல்.ஏக்கள் இருவரும் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி டிஆர்எஸ்-ல் இணைந்திருக்கின்றனர்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பிங்க் நிற மேல் துண்டை அணிந்திருந்த இருவரும் சபாநாயகர் போச்சாரம் சீனிவாஸ் ரெட்டியை நேரில் சந்தித்து இணைப்பு கடிதத்தை அளித்தனர். கட்சி மாறிய இரு எம்.எல்.ஏக்களும் தங்களின் முடிவை சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தெலங்கானாவில் களத்தை இழந்த தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களுமே அதில் இருந்து விலகி ஆளும் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்திருப்பது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து 2 எம்.எல்.ஏக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்திருப்பதால் அந்த கட்சியின் சட்ட்மன்ற பலம் 103 ஆக அதிகரித்துள்ளது.

119 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தெலங்கானா சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 6 எம்.எல்.ஏக்களும், அசாதுதீன் ஒவைசி கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 2 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். காலியாக இருக்கும் நாகார்ஜூனசாகர் எனும் ஒரு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 17ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாய்கள் எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள
2. புத்தாண்டு பரிசு: தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஓய்வூதிய வயது அதிகரிப்பு
தெலுங்கானாவில் புத்தாண்டு பரிசாக மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஓய்வூதிய வயது அதிகரிப்பு என முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.