தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: பிரயாக்ராஜில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல் + "||" + Uttar Pradesh: Curfew imposed in Prayagraj from tonight

உத்தர பிரதேசம்: பிரயாக்ராஜில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்

உத்தர பிரதேசம்:  பிரயாக்ராஜில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்றிரவு முதல் அடுத்த உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு அமலாகிறது.
பிரயாக்ராஜ்,

நாடு முழுவதும் உச்சமடைந்து வரும் கொரோனா பாதிப்புகளில் உத்தர பிரதேசமும் பாதிக்கப்பட்டு உள்ளது.  4,689 பேருக்கு நேற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  27,509 பேர் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  30 பேர் பலியான நிலையில், இதுவரை 8,924 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தொடர்ந்து சமீப நாட்களாக தொற்று அதிகரித்து வரும் சூழலில், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்றிரவு முதல் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, இன்றிரவு 10 மணி தொடங்கி காலை 8 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.  அடுத்த உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட மாஜிஸ்திரேட் அறிவித்து உள்ளார்.  எனினும், இந்த ஊரடங்கில் இருந்து அத்தியாவசிய சேவைகள் விலக்களிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, கான்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களிலும் இன்றிரவு முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்.30- ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் : டெல்லி அரசு அறிவிப்பு
டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது.
2. ராஜஸ்தானில் நாளை முதல் வருகிற 19ந்தேதி வரை இரவு ஊரடங்கு; அரசு முடிவு
ராஜஸ்தானில் நாளை முதல் வருகிற 19ந்தேதி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
3. கர்நாடகாவில் திரையரங்குகளில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதி; வரும் 7ந்தேதி முதல் அமல்
கர்நாடகாவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகளில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கும் முடிவு வருகிற 7ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்.
4. புதுச்சேரி சட்டசபை தேர்தல்; 48 மணிநேர 144 தடை உத்தரவு அமல்
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 48 மணிநேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தின் புனே நகரில் ஒரு வாரத்திற்கு இரவு ஊரடங்கு அமல்
மராட்டியத்தின் புனே நகரில் கொரோனா பாதிப்பு உயர்வால் ஒரு வார காலத்திற்கு 12 மணிநேர இரவு ஊரடங்கு அமலாகிறது.