மாநில செய்திகள்

நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Belonging to the same family near Nellai Corona infection in 13 people

நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று

நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று
நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் தெருக்களை அடைக்கும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 2 டாக்டர்கள் உள்பட 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றும் 14 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 444 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ளனர்

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பேட்டை, செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி 2 டோஸ் போட்ட பிறகும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. 100 பேருக்கு மேல் பணியாற்றும் இடங்களிலேயே கொரோனா தடுப்பூசி ; மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு
தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்தும் விதமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
3. மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாந்கராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகம் உள்ளது - ஆதார் பூனவல்லா
வெளிப்படையாகச் சொல்வதானால் தடுப்பூசி சப்ளைக்கு அழுத்தம் அதிகம் உள்ளது என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார்.
5. நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை - மத்தியமந்திரி ஹர்ஷ் வர்தன் விளக்கம்
நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார்.