தேசிய செய்திகள்

சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது - மாநில மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு + "||" + A challenging situation is emerging again says PM Modi on Coronavirus Situation

சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது - மாநில மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது - மாநில மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
மாநில முதல்மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, மராட்டியம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

மாநில முதல்மந்திரிகளுடனான ஆலோசனையின் போது பிரதமர் மோடி பேசியதாவது,

சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது. கொரோனா பரவல் சூழ்நிலையை கட்டுப்படுத்த உங்கள் அனைவரின் ஆலோசனைகளை கொடுக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். 

கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும். மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கார், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் நிலைமை. மக்கள் பதட்டமடையாமல் உள்ளனர். பல மாநில அரசுகள் கவலையின்றி மிகவும் சாதாரணமாக உள்ளன. கொரோனாவை எதிர்த்து மீண்டும் போராட தேவை ஏற்பட்டுள்ளது. அனைத்து சவால்கள் இருந்தபோதும், நம்மிடம் அனுபவமும், வளமும், தடுப்பூசியும் உள்ளது.

கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 70% ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதே நமது இலக்கு. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கட்டும், ஆனால், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துங்கள். கொரோனா பரிசோதனை மாதிரிகளை சரியாக சேகரிப்பது மிகவும் முக்கியம். சரியான நிர்வாகம் மூலம் அது பரிசோதிக்கப்பட வேண்டும். கொரோனா பரவியவர்களை கண்டறிதலும், கண்காணித்தலுமே வைரஸ் பரவலை தடுப்பதற்கான வழிகள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெருந்தொற்றை எதிர்த்து போரிட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
பெருந்தொற்றை எதிர்த்து போரிடுவதற்கு கொரோனா கால விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
2. மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல - பிரதமர் மோடி பேச்சு
மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் பற்றி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்
4. வாரணாசி தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட திட்டமா? மம்தா பானர்ஜி, தோல்வியை உணர்ந்து வெளிமாநிலத்தில் இடம் தேடுகிறாரா? பிரதமர் மோடி கேள்வி
வாரணாசி தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிட திட்டமிட்டுள்ள மம்தா பானர்ஜி, தனது தோல்வியை உணர்ந்து, வேறு மாநிலத்தில் தொகுதி தேடுகிறாரா? என்று பிரதமர் மோடி கேள்வி விடுத்துள்ளார்.
5. கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.