தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி + "||" + Three unidentified terrorists killed in an ongoing operation at Shopian in Kashmir

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஜன் மோஹால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

என்கவுண்டர் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
2. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்
காஷ்மீரில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், மேல்நிலைப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
3. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
4. ஜம்மு-காஷ்மீர்: பாஜக தலைவர் வீட்டை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர்களில் ஒருவரான அன்வர் கான் வீட்டை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
5. காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி
காஷ்மீரில் நகராட்சி அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கவுன்சிலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.