தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,437 பேருக்கு தொற்று உறுதி + "||" + 7,437 new COVID-19 cases reported in Delhi in last 24 hours

டெல்லியில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,437 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் மேலும் அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 7,437 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,437 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் அதிகபட்ச அளவாக இன்று மேலும் 7,437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,98,005 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,157 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 3,687 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,63,667 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 23,181 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 5,506 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
3. டெல்லியில் அதிபட்ச அளவாக ஒரே நாளில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உச்சம் தொடுமா டெல்லி அணி?
ஐ.பி.எல். போட்டியில் அதிக தோல்வியை சந்தித்த (105 தோல்வி) அணி என்ற மோசமான பொதியை சுமந்து கொண்டு இருக்கும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ். 4 முறை ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்துள்ள அந்த அணி கடந்த ஆண்டு முதல் முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
5. டெல்லியில் புதிதாக 3,548 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 15 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.