மாநில செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன் டுவீட் + "||" + Kamal Hassan Wishes Speedy Recovery of Pinarayi Vijayan From Coronavirus

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன் டுவீட்

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன் டுவீட்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையில், தமிழகம், கேரளாவில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், கேரள முதல்மந்திரி பினராயி விஜயன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சமத்துவ மக்கள் கட்சி துணை பொது செயலாளர் ராதிகா சரத்குமார் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த அரசியல் தலைவர்கள் விரைவில் குணமடைய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான்  உள்பட.’ என தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி
கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 56,286 பேருக்கு கொரோனா - 376 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 56 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 18 பேர் பலி
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
5. உத்தரகாண்ட்: ஐஐடி ரூர்க்கியில் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐஐடி-யில் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.