மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மதுரையில் 18 தெருக்கள் மூடல் + "||" + Increase in corona damage: 18 streets closed in Madurai

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மதுரையில் 18 தெருக்கள் மூடல்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மதுரையில் 18 தெருக்கள் மூடல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மதுரையில் 18 தெருக்கள் மூடப்பட்டுள்ளன.
மதுரை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு மதுரையும் விதிவிலக்கு அல்ல. மதுரை புறநகர் பகுதியை காட்டிலும் நகர் பகுதியில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், சிலர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர்.

இந்தநிலையில் அதிகமாக கொரோனா பாதித்துள்ள தெருக்களை கண்டறியும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது. அதன்படி, 3 -க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்ட தெருக்கள் கண்டறிந்து அவற்றை மூடும் பணி நேற்று தொடங்கியது. மதுரையில் முதற்கட்டமாக மதுரை நகர் பகுதியில் 18 தெருக்கள் மூடப்பட்டுள்ளன. இந்த தெருக்களின் தொடக்கம் மற்றும் முடிவுறும் பகுதியில் தகரங்கள் வைத்து மூடப்பட்டு நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த காலங்களில் மதுரையில் 5-க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்ட தெருக்கள் மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா அதிவேகமாக பரவுவதால், 3-க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த தெருக்களை மூடும் பணி நடக்கிறது. முதற்கட்டமாக 16 வார்டுகளில் உள்ள 18 தெருக்கள் மூடப்பட்டுள்ளன. இந்த தெருக்கள் அனைத்தும் 14 நாட்கள் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் - மாநகராட்சி அறிவிப்பு
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாந்கராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: வங்காளதேசத்தில் ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வங்காளதேசத்தில் ஒரு வார காலத்துக்குஅந்த நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
3. சென்னை-மதுரை இடையே வரும் ஏப்ரல் 18 முதல் அதிவேக சிறப்பு ரெயில் இயக்கம்
கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்திய பிரதேசம்-மராட்டியம் பேருந்து போக்குவரத்துக்கு தற்காலிக தடை
கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து மராட்டியம் செல்லும் பேருந்து போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.