உலக செய்திகள்

உலக பொருளாதாரம் வேகமான வளர்ச்சிக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீண்டு வருவது தான் - உலக வங்கி தலைவர் கருத்து + "||" + Faster global growth driven primarily by US, China and India: World Bank president

உலக பொருளாதாரம் வேகமான வளர்ச்சிக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீண்டு வருவது தான் - உலக வங்கி தலைவர் கருத்து

உலக பொருளாதாரம் வேகமான வளர்ச்சிக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீண்டு வருவது தான் - உலக வங்கி தலைவர் கருத்து
உலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் முக்கிய காரணம் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், 

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம்  அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் தொடங்கியது. அதில் பங்கேற்ற உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனாவால் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக, தடுப்பூசி விஷயத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. நடுத்தர குடும்பத்தினரின் வருவாய் உயரவில்லை. இன்னும் கூட குறையக்கூடும். ஏழை நாடுகளில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. உலகளாவிய வட்டிவிகிதம் குறைந்த அளவுக்கு ஏழை நாடுகளில் குறையவில்லை.

இந்த கவலைக்கிடையே ஒரு நல்ல செய்தி. உலக பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. அதற்கு அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீண்டு வருவது தான் முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.