உலக செய்திகள்

5 நாள் பயணமாக ராணுவ தளபதி நரவனே வங்காளதேசம் சென்றார் + "||" + Army Chief General MM Naravane leaves for Bangladesh on 5-day visit

5 நாள் பயணமாக ராணுவ தளபதி நரவனே வங்காளதேசம் சென்றார்

5 நாள் பயணமாக ராணுவ தளபதி நரவனே வங்காளதேசம் சென்றார்
ராணுவ தளபதி நரவனே 5 நாள் பயணமாக வங்காளதேசம் சென்றார்.
டாக்கா, 

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, 5 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்துக்கு சென்றார். அவருடைய மனைவியும், 2 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் உடன் சென்றுள்ளனர். வங்காளதேச ராணுவ தளபதி அஜீஸ் அகமது அழைப்பின் பேரில் நரவனே சென்றுள்ளார். அவரது பயணம், இரு நாட்டு ராணுவத்துக்கிடையிலான நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்காளதேச ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளை ராணுவ தளபதி நரவனே மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்.

1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போரில் உயிர் நீத்த வங்காளதேச ராணுவ வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அவர் ராணுவ நிலையங்களுக்கு செல்கிறார். கூட்டு ராணுவ பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்.