தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தொடங்கியது + "||" + SSLC, Plus-2 examination started in Kerala with corona restrictions

கொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தொடங்கியது

கொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இதனால் தேர்வு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததால் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் பிளஸ்-2 தேர்வும், மதியம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் நடந்தது.

இந்த ஆண்டு 2,947 மையங்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 226 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். வளைகுடா நாடுகளில் 9 மையங்களில் 573 பேரும், லட்சத்தீவில் 9 மையங்களில் 627 பேரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்.

அதே போல் 2,004 தேர்வு மையங்களில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 471 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். கொரோனா தொற்று காரணமாக முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனையும் நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனி அறையில் தகுந்த பாதுகாப்புடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தேர்வு தொடர்ச்சியாக 12-ந் தேதி வரை நடக்கிறது. பிறகு விஷூ பண்டிகை விடுமுறைக்கு பிறகு 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இடைவெளி விட்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை
தமிழகத்தில் மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
2. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்- கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
3. கொரோனா மீண்டும் அதிகரிப்பு: கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு
கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
4. கேரளாவில் 10:15 மணி நிலவரப்படி 21.5 சதவீத வாக்குகள் பதிவு
காலை 9:11 மணி வரை மேற்கு வங்காளத்தில் - 4.88 சதவீத வாக்குகளும் அசாமில் - 0.93 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது
5. கொரோனா பரவல் எதிரொலி: கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை
கொரோனா பரவல் எதிரொலியாக கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.