தேசிய செய்திகள்

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம் - ஆன்லைனில் நடத்தவும் கோரிக்கை + "||" + 10th, 12th Class CBSE Students' option to cancel exams - Request to run online

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம் - ஆன்லைனில் நடத்தவும் கோரிக்கை

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம் - ஆன்லைனில் நடத்தவும் கோரிக்கை
10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம் என்றும் ஆன்லைனில் நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி, 

கொரோனாவின் 2-வது அலை வீசுவதால் பல்வேறு மாநிலங்களிலும், இதற்கிடைய பள்ளிகளை மூடுவது, தேர்வுகளை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.), மத்திய பள்ளி தேர்வு கவுன்சில் ஆகியவை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்துவது என்று முடிவு செய்திருந்தன. செய்முறை தேர்வுகள் நடந்துள்ள நிலையில், ஜூனில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் “கேன்சல்போர்டு எக்ஸாம்-2021” என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.

மேலும் சேஞ்ச்.ஆர்க் (change.org) இணையதளம் வழியாக, ஒரு மனு பிரபலமாக அதிகம் பேரால் பகிரப்பட்டது. அந்த மனுவில், “இந்தியாவில் கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கிறது. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மனுவை ஆதரித்து பகிர்ந்து உள்ளனர்.

இதில் மாணவர் குறிப்பிடும்போது, “ஆன்லைனில வகுப்புகள் நடந்ததுபோல ஆன்லைனில் தேர்வுகள் நடத்தலாம் அல்லது முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்” என்று கூறி உள்ளார்.

ஆனால் தேர்வு தள்ளிவைப்பது தொடர்பாக சி.பி.எஸ்.இ. எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. “9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது” - பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
3. 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
4. சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ந்தேதி வெளியாகிறது
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2-ந்தேதி வெளியாகிறது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
5. 10, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறும் கருத்துகள் என்ன?
10, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என்பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.