மாநில செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு + "||" + Appointment of District Monitoring Officers to control the spread of Corona - Government of Tamil Nadu Order

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்டம்தோறும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க 36 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் தினசரி எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர், தினசரி எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது, குறிப்பிட்ட கால இடைவெளியில் எத்தனை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொரோனா தடுப்பு உபகரணங்களான முக கவசம், கொரோனா பரிசோதனை கருவி, கொரோனா கவச உடை போன்றவை இருப்பு உள்ளதா? என்பதையும், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் முறையாக விதிமுறைகள்படி செயல்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.