தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் முக கவசம்: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் + "||" + Why face masks not important for election rallies? Delhi HC seeks reply from Centre, EC

தேர்தல் பிரசாரத்தில் முக கவசம்: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தேர்தல் பிரசாரத்தில் முக கவசம்: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிட கோரிய மனு மீது மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் சில மாநில லோக்சபா இடைத் தேர்தல் மார்ச் 27ல் துவங்கி இம்மாதம் 29 வரை நடக்கிறது. நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் முக கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உத்தர பிரதேச முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சாமானிய மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்தின் போது முக கவசம் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வலியுறுத்தி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.