உலக செய்திகள்

அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 4 பேர் காயம் + "||" + One person was killed & at least 4 others were wounded in a shooting at an industrial park in Bryan, Texas, said police

அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 4 பேர் காயம்

அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவில் டெக்ஸ்சாஸ் பூங்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்,

அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர் கதையாகி  வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸின் பிரையனில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் குறைந்தது 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர். தகவலறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். 

தொழில்துறை பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்ததை அடுத்து டெக்சாஸின் பிரையன் நகர் போலீசார் சந்தேக நபரைத் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.