தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல் + "||" + 60-hour full curfew in Madhya Pradesh

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு - இன்று மாலை 6 மணி முதல் அமல்
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணிக்கு இது அமலுக்கு வருகிறது.
போபால், 

மத்தியபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த 3 வாரங்களாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, மத்தியபிரதேசத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 43 ஆக அதிகரித்தது. 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்த பிறகு சிவராஜ்சிங் சவுகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, 9-ந்தேதி (இன்று) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்தியபிரதேசம்: ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து - 13 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
2. மத்தியபிரதேசம்: பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு
மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
3. மத்தியபிரதேசத்தில் ”எமன்” வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி
மத்தியபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
4. மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் சாவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
5. மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.