தேசிய செய்திகள்

இந்தியாவும், இலங்கையும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு + "||" + India, Sri Lanka agree to jointly work against terror groups, fugitives

இந்தியாவும், இலங்கையும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு

இந்தியாவும், இலங்கையும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இணைந்து செயல்பட முடிவு
இந்தியா மற்றும் இலங்கையின் உயர் போலீஸ் அதிகாரிகள் இடையேயான முதல் கூட்டம் நேற்று மெய்நிகர் முறையில் நடந்தது.
புதுடெல்லி, 

இந்தியா மற்றும் இலங்கையின் உயர் போலீஸ் அதிகாரிகள் இடையேயான முதல் கூட்டம் நேற்று மெய்நிகர் முறையில் நடந்தது. இதில் இந்திய உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார், இலங்கையின் போலீஸ் ஐ.ஜி. விக்ரமரத்னே தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு தரப்பிலும் பிற பாதுகாப்பு குழுக்களின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், சர்வதேச மற்றும் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள், தப்பி ஓடிய குற்றவாளிகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் இருநாடுகளுக்கு இடையே போலீஸ் துறையில் ஏற்கனவே இருக்கும் ஒத்துழைப்பு வழிமுறைகளை மேலும் பலப்படுத்துவது, ஏற்கனவே உள்ள மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட கையாளுவதற்கு சிறப்பு வழிகளை ஏற்படுத்துவது எனவும் இரு தரப்பும் முடிவு செய்தன.

முன்னதாக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், இருநாடுகளுக்கு இடையேயான கடல் பகுதியில் இயங்கும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இருதரப்பும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைளை ஒருவருக்கொருவர் பாராட்டினர். அத்துடன் நிகழ்நேர உளவுத்தகவல்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதன் அவசியத்தையும் இருதரப்பும் வலியுறுத்தின.