தேசிய செய்திகள்

காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுண்ட்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + Successive encounters in Kashmir; 5 terrorists shot dead

காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுண்ட்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுண்ட்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்தடுத்து நடந்த என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
காஷ்மீர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் 3 பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

இது தவிர்த்து, 2 பயங்கரவாதிகள் மசூதிக்குள் இருந்து பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.  இதனால் தொடர்ந்து என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.

இதேபோன்று திரால் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து நடந்த என்கவுண்ட்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.