தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் + "||" + in view of COVID19. Now 2nd wave has begun, farmers & their unions should follow COVID protocol-Union Agriculture Minister NS Tomar

கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை  விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி,

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியாணாவை சேர்ந்த விவசாயிகள் கடந்த 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவல் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக முதியவர்களையும் சிறார்களையும் வீட்டுக்கு திரும்ப அறிவுறுத்துங்கள் என நான் விவசாய சங்க தலைவர்களிடம் பல முறை வலியுறுத்தியுள்ளேன். தற்போது கொரோனாவின் 2-வது அலை துவங்கியுள்ளது. 

விவசாயிகளும் விவசாய சங்கங்களும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். சட்டத்தில் உள்ள சிக்கலான விஷயங்கள் குறித்து  ஆலோசிக்க தயராக இருப்பதாகவும் திருத்தம் செய்யவும் நாங்கள் முன்வந்தோம். 

ஆனால், எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டனர்.  அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றாலோ, விவசாய சங்கங்களுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டாலோ போராட்டம் நீடிக்கமால். ஆனால், இங்கு எப்படியாயினும் போராட்டத்தை தொடர்வது என விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன” என கட்டமாக கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் ‘கொரோனாவுக்கு சுயவைத்தியம் செய்துகொள்வது தவறான செயல்’; அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் கொரோனாவுக்கு சுயவைத்தியம் என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்வது தவறான செயலாகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. 3 லட்சத்துக்கு கீழே இறங்கிய கொரோனா ஒருநாள் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
25 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
3. ஓமனில், ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா; 13 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; வெளிநாட்டினர் தைவான் வர தடை விதிப்பு
கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
5. தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடலாம்; குடியிருப்பு வளாகங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும் மாநகராட்சி அனுமதி
தானேயில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.