உலக செய்திகள்

ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை + "||" + Warning for ‘rare and dangerous weather’ as double tropical cyclones Seroja and Odette close in on WA coast

ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஆஸ்திரேலியா: செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தாக்க உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கான்பெர்ரா, 

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதிகளை செரோஜா மற்றும் ஓடெட் ஆகிய 2 சக்தி வாய்ந்த புயல்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த 2 புயல்களும் வார இறுதியில் அடுத்தடுத்து தாக்கவுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்த இரண்டு புயல்கள் காரணமாக அரிய மற்றும் ஆபத்தான வானிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளிகளின் தாக்கம் அடுத்த 24 முதல் 28 மணி நேரத்தில் உணரப்படும் என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு கிமோர் மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளுக்கு செரோஜா புயல் ஏற்கனவே அழிவு மற்றும் இறப்புகளை ஏற்படுத்திய உள்ளது. வெப்பமண்டல சூறாவளிகளான செரோஜா மற்றும் ஓடெட் புயல்கள் நிலத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் மழை “கடினமாகவும் வேகமாகவும்” உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் (பிஓஎம்) எச்சரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா விதித்த பயண தடை முடிவு; இந்தியாவின் முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றது
இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
2. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மேக்கில், நான்கு நபர்களால் கடந்த மாதம் கடத்தப்பட்டார். க
3. இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை: பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு
இந்திய பயணிகள் விமானங்களுக்கு மே 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
5. ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடி நாளை ஆலோசனை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை நடக்கிறது. கொரோனா, பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.