உலக செய்திகள்

பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி + "||" + Bahrain mosques to allow only those who took COVID-19 vaccine

பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி

பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி
பஹ்ரைனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனாமா,

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் தொழுகைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி பெற்ற (இரண்டாவது டோசுக்கு 14 நாட்களுக்குப் பிறகு) மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு, மீட்பு சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே மசூதிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டன. பிறகு, கொரோனா தொற்று குறைந்த பிறகு, படிப்படியாகத் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு பாதிப்புள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; சுகாதாரத்துறை செயலர் அறிவுரை
சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் அறிவுரை கூறினார்.
2. ரம்ஜான் பண்டிகை: மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது மாநில அரசு உத்தரவு
ரம்ஜான் பண்டிகையையொட்டி கூட்டமாக மசூதிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
4. ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
ஜூன் மாதத்திற்குள் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி இரு மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. கொரோனா தடுப்பூசி: காப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்க ஜெர்மன் எதிர்ப்பு
காப்புரிமை விலக்கு அளிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் பரிந்துரை ஒட்டுமொத்த தடுப்பூசி உற்பத்தியில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும் என ஜெர்மன் கூறியுள்ளது.