மாநில செய்திகள்

சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் + "||" + In Chennai, those who did not wear face mask were fined Rs.2lakhs in last 3 days

சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்

சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்
சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு, கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பு விதிகள் மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை காவல்துறையினர் கடந்த 8 ஆம் தேதி முதல் 3 நாட்களாக பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த 3 நாட்களில் முக கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரங்களை சென்னை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 3 நாட்களில் சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது 1,118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 2 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் அவசர பணிகளுக்காக 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவு
சென்னையில் அவசர பணிகளுக்காக 200 அரசு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
2. சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. சென்னை சி.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்தவர்: கொரோனா தொற்றுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்த சென்னை சி.பி.சி.ஐ.டி பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கொரோனா தொற்றுக்கு பலியானார்.
5. ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன
ஜொ்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.