தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 59 பேர் பலி + "||" + In Punjab State Corona 3,116 cases, 59 more deaths; toll crosses 7,500-mark

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 59 பேர் பலி

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 59 பேர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
சண்டிகர், 

பஞ்சாப் மாநிலத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் இரவு நேர பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் மேலும் 3,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,72,772 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மாநிலத்தில் 59 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,507 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 3,121 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,37,391 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் தற்போது 27,874 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,673 பேருக்கு கொரோனா
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,316 ஆக உயர்ந்துள்ளது.
3. பெயர் மாற்றம் பஞ்சாப் அணிக்கு பேரின்பம் அளிக்குமா?
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
4. பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா
பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பஞ்சாப்: சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
பஞ்சாப்பில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.