மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு + "||" + Chance of thundershowers in 8 districts for the next 3 hours - Chennai Meteorological Center

8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டுவதற்கே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சென்னையிலும் மற்ற மாவட்டங்களுக்கு நிகராக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதற்கிடையே கோயம்பேடு உள்பட சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இந்தநிலையில், வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 13-ந்தேதி (இன்று) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தென்தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.