மாநில செய்திகள்

மோடி தலைமையிலான அரசில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி - திருக்குறளை குறிப்பிட்டு ப.சிதம்பரம் குற்றச்சாட்டு + "||" + Fall of industrial production in the Modi-led government - P. Chidambaram accuses Thirukurala

மோடி தலைமையிலான அரசில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி - திருக்குறளை குறிப்பிட்டு ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மோடி தலைமையிலான அரசில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி - திருக்குறளை குறிப்பிட்டு ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மோடி தலைமையிலான அரசில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி தொடர்பாக திருக்குறளை குறிப்பிட்டு ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 7-வது ஆண்டினை நிறைவு செய்ய உள்ள நிலையில், பணவீக்கம் உயர்வு, தொழில்துறையின் உற்பத்தி வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நசுக்கும் வரிகளைச் சேர்த்தல், அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் அதிகமான மக்கள் வறுமை மற்றும் கடன் சுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்து தொடங்கிய 5 வருட கால தவறுதலான நிர்வாகத்தின் விளைவு ஆகும்.

அப்போதில் இருந்து, ஒவ்வொரு அடியும் தவறானது, அதன் கொள்கைகள் மற்றும் முடிவுகள் நம்பிக்கையற்ற முறையில் தவறானவை என்பதை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மோடியின் தவறு என்னவென்றால், அவர் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் அல்லது பொருளாதார வல்லுநர்களின் நல்ல ஆலோசனையை கவனிக்க மாட்டார்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்

என்ற 448-வது குறளை நினைவு கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கருத்து
செயல்திறனை அளவுகோலாக வைத்து பார்த்தால், பிரதமர் மோடியைத்தான் முதலில் நீக்கி இருக்க வேண்டும் என்று மத்திய மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
2. மோடி, நிதிஷ்குமார் அரசுகளை விமர்சித்த லாலு பிரசாத்
லாலு பிரசாத் யாதவ், நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களிடையே அரசியல் பேசினார். அவர் மோடி, நிதிஷ்குமார் அரசுகளை விமர்சித்தார்.
3. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்; மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரியை குறைக்குமாறு பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
4. டிசம்பர் மாதத்துக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி: ஜே.பி.நட்டா
டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 200 கோடி தடுப்பூசி இருக்கும் என்று ஜே.பி.நட்டா கூறினார். நிலம், நீர், ஆகாய மார்க்கமாக மோடி ஆக்சிஜன் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
5. பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன் என்பதற்கு சிவசேனா விளக்கம் அளித்துள்ளது.