தேசிய செய்திகள்

காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலால் மூடப்பட்ட பிரபல உணவகம் மீண்டும் திறப்பு + "||" + Kashmir's Krishna Dhaba reopens months after terror attack

காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலால் மூடப்பட்ட பிரபல உணவகம் மீண்டும் திறப்பு

காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலால் மூடப்பட்ட பிரபல உணவகம் மீண்டும் திறப்பு
காஷ்மீரில் பிரபல உணவகமான கிருஷ்ணா தாபாவில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உணவ உரிமையாளரின் மகன் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள பிரபல உணவகம் கிருஷ்ணா தாபா. இந்த உணவகத்தின் உரிமையாளராக ரமேஷ் மேஹ்ரா செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கிருஷ்ணா தாபா உணவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் உணவ உரிமையாளர் ரமேஷ் மேஹ்ராவின் மகன் ஆகாஷ் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 28-ம் தேதி ஆகாஷ் உயிரிழந்தார். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து கிருஷ்ணா தாபா உணவகம் மூடப்பட்டதது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 2 மாதங்கள் கழித்து கிருஷ்ணா தாபா உணவகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. உணவகம் திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு வந்து உணவு சாப்பிட்டு சென்றனர்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது தொடர்பாக உரிமையாளர் ரமேஷ் மேஹ்ரா கூறுகையில், நாங்கள் எப்போதும் பாதுகாப்பாக உணருகிறோம். பயங்கரவாத தாக்குதல்கள் பிறருக்கும் நடக்கிறது. நாங்கள் இங்கு தான் பிறந்தோம். வாழ்நாள் முழுவதும் இங்கு தான் வாழ்வோம். வாழ்க்கை என்பதே நகர்ந்து செல்வது தான். ஆகையால், எனது வேலைக்கு நான் வந்துள்ளேன்’ என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
2. இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த நபர் கடந்த 11-ம் தேதி இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துள்ளார்.
3. காஷ்மீர்: பள்ளத்தாக்கில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
4. எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை மீண்டும் திருப்பிக்கொடுத்துவிடுங்கள் - மெகபூபா முப்தி பேச்சு
எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டதை (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து) மீண்டும் எங்களுக்கு திருப்பிக்கொடுக்குமாறு நாங்கள் நமது நாட்டிடம் கேட்டுக்கொள்கிறேம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
5. காஷ்மீர் என்கவுண்டர் : பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் 2 வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை