உலக செய்திகள்

இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி + "||" + Shooting Near Hospital Kills One in England

இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்கம் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அருகே நேற்று (அந்நாட்டு நேரப்படி மாலை 5.30 மணி) 2 ஆண் நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் மருத்துவமனை அருகே நின்றுகொண்டிருந்த 2 பேர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்களை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஒரு நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மிங்கம் நகர மருத்துவமனை பகுதியை சுற்றிவளைத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.   

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன
மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.
2. டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்
டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்களை மொத்தம் 18 நாட்கள் தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
3. ஐ.பி.எல். போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடமாட்டார்; இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கிறார்.
4. பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!
இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது.
5. இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவச கொரோனா பரிசோதனைகள்
இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.