மாநில செய்திகள்

முக கவசம் அணியாவிட்டால் அபராதம்; தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள் பதிவு + "||" + Fine for not wearing face mask; 2.25 lakh cases were registered in Tamil Nadu in the last one week

முக கவசம் அணியாவிட்டால் அபராதம்; தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள் பதிவு

முக கவசம் அணியாவிட்டால் அபராதம்; தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள் பதிவு
தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்றவர்கள் மீது கடந்த ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 8 ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் முக கவசம் அணியாதவர்கள் மீது 2 லட்சத்து 25 ஆயிரத்து 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் முக கவசம் அணியாதவர்கள் மீது 1,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 லட்சத்து 56 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விதிமீறல்: ரெயில்வே பயணிகளிடம் 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம்
கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் கடந்த 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
2. சென்னையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள்: 3 மணி நேரத்தில் ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு
சென்னை திருவொற்றியூரில் வாகன சோதனையின் போது அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3. சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்
சிறப்பு வாகன சோதனையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்.
4. முக கவசத்தை மறந்த மக்கள்
வத்திராயிருப்பில் முக கவசத்தை அணிவதை மக்கள் மறந்து விட்டனர்.
5. தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில் தமிழகத்தில் 41 ஆயிரம் வழக்குகள் இரு தரப்பினரின் சம்மதத்துடன் முடிவுக்கு வந்ததாக மாநில சட்டப்பணி ஆணைக்குழு நீதிபதி கூறினார்.