தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு + "||" + Night curfew announced in Rajasthan till April 30

ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்பூர்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் பதிவாகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு மாநிலம் முழுவதும் 6,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், 1,956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 16 முதல் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா விதிமுறை பின்பற்றாமல் உடல் அடக்கம்: வாரத்தில் 21 பேர் அடுத்தடுத்து சாவு; ராஜஸ்தான் கிராமத்தில் அதிர்ச்சி
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்துக்கு உட்பட்ட கீர்வா கிராமத்தில் கொரோனா பாதித்த நபர் ஒருவர் கடந்த மாதம் 21-ந்தேதி உயிரிழந்தார்.
2. ராஜஸ்தான் மாநிலத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்
ராஜஸ்தானில் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்
ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் அவரது மகள் பாய்ந்த அதிர்ச்சி அசம்பவம் நிகழ்ந்தது.
4. ஐதராபாத்தின் பரிதாபம் தொடருகிறது: ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ராஜஸ்தான் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லரின் அபார சதத்தால் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
5. ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.