தேசிய செய்திகள்

கொரோனா பரவல் அதிகரிப்பு: துணைநிலை ஆளுநருடன் டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆலோசனை + "||" + Delhi CM Arvind Kejriwal to hold a meeting with Lieutenant Governor today on Covid Situtation in Delhi

கொரோனா பரவல் அதிகரிப்பு: துணைநிலை ஆளுநருடன் டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு: துணைநிலை ஆளுநருடன் டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆலோசனை
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் துணை நிலை ஆளுநருடன் முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதன்படி, டெல்லியில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 17 ஆயிரத்து 282 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 50 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று 9 ஆயிரத்து 952 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இதனால் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 5 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 540 ஆக அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

டெல்லி துணைநிலை ஆளுநர் - முதல்மந்திரி கெஜ்ரிவால் இடையே இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனைக்கப்பட உள்ளது.

துணைநிலை ஆளுநருடனான ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி, தலைமைச்செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்
மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப்பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை என்று புகார் கொடுத்த நபர் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
3. மந்திரிகளின் ஓராண்டு சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடக அமைச்சரவை இடம்பெற்றுள்ள மந்திரிகளின் ஓராண்டு சம்பளம் முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
4. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் - ஜோ பைடன்
விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவை... கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.