தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் + "||" + Kerala CM Pinarayi Vijayan tests Covid negative and discharged from hospital

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா பரவிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.
திருவனந்தபுரம்,

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தில் ஈடுபட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், கேரள முதல்மந்திரி பினராயி விஜயனுக்கு கடந்த 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், பினராயி விஜயன் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்துள்ளார். நேற்று அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் ’நெகட்டிவ்’ என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பினராயி விஜயன் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து தனது வீட்டில் ஒரு வார காலம் ஓய்வு எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 6-ம் தேதி கேரள முதல்மந்திரி விஜயனின் மகள் வினாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.    

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்
மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப்பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை என்று புகார் கொடுத்த நபர் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
3. மந்திரிகளின் ஓராண்டு சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடக அமைச்சரவை இடம்பெற்றுள்ள மந்திரிகளின் ஓராண்டு சம்பளம் முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
4. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் - ஜோ பைடன்
விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவை... கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.