மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + More than 8000 people in Tamil Nadu are confirmed with corona infection today

தமிழகத்தில் இன்று 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், இன்றைய தினம் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,71,384 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,96,759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,920 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 33 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,032 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 2,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர அதிகபட்சமாக செங்கல்பட்டு 795 பேர், கோவை 583 பேர், திருவள்ளூர் - 453 பேர், காஞ்சிபுரம் - 303 பேர், தூத்துக்குடியில் 277 பேர், திருச்சியில் 273  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்!
மராட்டியத்தில் 103 வயது முதியவர் ஒருவர் கொரோனாவை வென்று இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.
2. தமிழகத்தில் இன்று மட்டும் 19,112 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 19,112 பேர் குணமடைந்துள்ளனர்.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.
4. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.