மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ் + "||" + Chief Minister Palanisamy discharged after being admitted to a private hospital

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை, 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹெர்னியா) பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

ஆனால், அப்போது தமிழக சட்டப்பேரவைத் தோதல் பிரசாரம் தொடங்கியிருந்ததால், அவா் மருத்துவமனையில் சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. தற்போது வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதலைமைச்சர் பழனிசாமி நேற்று அனுமதிக்கப்பட்டார். 

முன்னதாக முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்பது தெரியவந்தது. அதன் பின்னா் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சரின் உடல் நிலை சீராக இருந்ததால், அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் முதலமைச்சர் பழனிசாமி மூன்று நாட்கள் வீட்டில் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவரின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு அவர் முழு ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கடைகளை இரவு 7 மணி வரை திறக்கலாம்
தமிழகத்தில் 28-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
2. மேகதாது திட்டத்திற்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி: குமாரசாமி வலியுறுத்தல்
மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை விரைவாக வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
3. டெல்லியில் ஊரடங்கு தளர்வு: அனைத்து கடைகள், உணவு விடுதிகள் திறக்க இன்று முதல் அனுமதி
டெல்லியில் ஊரடங்கு தளர்வு அறிவிப்பினை முன்னிட்டு அனைத்து கடைகள், உணவு விடுதிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
4. பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
பாலியல் புகார் வழக்கில் கைதான கராத்தே மாஸ்டர் கெபிராஜிடம் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியதால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
5. சக வீரர் மீது மோதி காயம்; பிளெஸ்சிஸ் சிகிச்சைக்காக அனுமதி: மாற்று வீரராக அயூப்
கிரிக்கெட் போட்டியில் சக வீரர் மீது மோதி காயமடைந்த பிளெஸ்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மாற்று வீரராக அயூப் விளையாடினார்.