தேசிய செய்திகள்

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவிடம் அனுமதி கேட்கும் ஜான்சன் அண்டு ஜான்சன் + "||" + J&J Seeks India's Permission For Phase 3 Trial Of 1-Shot Vaccine: Report

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவிடம் அனுமதி கேட்கும் ஜான்சன் அண்டு ஜான்சன்

3-வது கட்ட கொரோனா தடுப்பூசி சோதனைக்கு இந்தியாவிடம் அனுமதி கேட்கும் ஜான்சன் அண்டு ஜான்சன்
ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனைக்கு, இந்தியாவிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது.  கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல அலைகளாக அடுத்து அடுத்து வேகமாக பரவி உலக நாடுகளை திணறடித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 

இதனால், தடுப்பூசிகள் போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. 

இந்நிலையில் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட  சோதனைக்கு இந்தியாவிடம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.  

இதற்கு முன்னதாக இந்தியாவில் 3ஆவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் இறக்குமதி உரிமம் பெறுவதற்காகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஜான்சன் அண்டு ஜான்சன் விண்ணப்பித்துள்ளது. தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை
மேல வாஞ்சூர் சோதனை சாவடியில்போலீசார் வாகன சோதனை.
2. நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேர் கைது 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாகூர், திட்டச்சேரி பகுதிகளில் சாராயம் - மதுபாட்டில்கள் கடத்திய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
3. நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
நாகையில் வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரில் ஆய்வு செய்தார். இதனால் தேவையின்றி வாகனங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
4. இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் போலீசார் தீவிர வாகன சோதனை
இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் போலீசார் தீவிர வாகன சோதனை.
5. ஆந்திரா மாநிலத்திலிருந்து வருபவர்களை கட்டுப்படுத்த பள்ளிப்பட்டு தாலுகாவில் 6 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்பாடு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நான்கு திசைகளிலும் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது.