தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசின் பாரபட்சமான திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம் + "||" + Centre’s new strategy is of vaccine discrimination, not distribution: Rahul Gandhi

கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசின் பாரபட்சமான திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்

கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசின் பாரபட்சமான திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனிடையே, நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மே ஒன்றாம் தேதியிலிருந்து தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தில் இந்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “18 முதல் 45 வயதானோருக்கு இலவச தடுப்பூசி இல்லை. விலை கட்டுப்பாடுகள் இல்லாமல் (தடுப்பூசி விற்பனையில்) இடைத்தரகர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளனர். பலவீனமான பிரிவுகளுக்குத் தடுப்பூசி உத்தரவாதமில்லை. இது இந்திய அரசின் பாரபட்சமான தடுப்பூசி திட்டம். தடுப்பூசி விநியோக திட்டமில்லை” என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசிக்காக பல மணிநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்- கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். எனவே கூட்டம் கூடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
2. 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே நடைபெற்ற முகாமில் 320 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை: அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு உறுதி
ஆண்கள் அல்லது பெண்களிடம் தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
4. 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆலங்குளம் அருகே நடைபெற்ற முகாமில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
5. கேரளா: உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி
கேரளாவில் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.