தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் + "||" + Army should help in corona treatment - Union Minister Rajnath Singh appeals

கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

கொரோனா சிகிச்சையில் ராணுவம் உதவ வேண்டும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
கொரோனா சிகிச்சை பணியில் ராணுவம் உதவ வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா 2வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது பேசிய அவர், கொரோனா சிகிச்சை பணியில் மாநில அரசுகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் ராணுவம், டி.ஆர்.டி.ஓ. ஆகிய அமைப்புகள், தங்களிடம் உள்ள நிபுணர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்காக உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ராணுவ கமாண்டர்கள், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்து, தேவையான உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க வேண்டுகோள்
கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்க தொழிற்சாலைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா சிகிச்சைக்கான புதிய தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
கொரோனா சிகிச்சைக்கு ஸைடஸ் நிறுவனத்தின் விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுபாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
3. கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்-யூரியா தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
4. கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே துறை தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
5. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.