தேசிய செய்திகள்

சிகிச்சை மறுக்கப்பட்ட மூதாட்டி பலி: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் - வீடியோ + "||" + Covid patient’s family allegedly attacks Apollo Hospital staff after woman fails to get bed

சிகிச்சை மறுக்கப்பட்ட மூதாட்டி பலி: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் - வீடியோ

சிகிச்சை மறுக்கப்பட்ட மூதாட்டி பலி: தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் - வீடியோ
சிகிச்சை மறுக்கப்பட்ட மூதாட்டி பலியானதால், தனியார் மருத்துவமனை மீது அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.
புதுடெல்லி, 

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் டெல்லி மற்றும் மராட்டிய மாநிலங்களில் உள்ள சில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், டெல்லி தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வந்த 62 வயது மூதாட்டிக்கு ஐ.சி.யு படுக்கை கிடைக்காததால் உயிரிழந்ததாக நோயாளியின் உறவினர்கள் குற்றச்சாட்டினர். 

முன்னதாக மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை எனக்கூறி மருத்துவமனை ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தீவிர பாதிப்பில் இருந்த மூதாட்டி சில மணி நேரங்களிலேயே பரிதாபமாக பலியானார்.

மூதாட்டி உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், மருத்துவமனைக்குள் புகுந்து ஐ.சி.யு வார்டு மற்றும் மருத்துவ உபகாரணங்களையும் சேதப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளின் உறவினர்கள் நடந்த தாக்குதலில் மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தனர். மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் ஊழியர்கள் திருப்பி அவர்களை தாக்கினர். இதன்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தொடர்புடைய செய்திகள்

1. பேராவூரணி அருகே: மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற கொடூரம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மூதாட்டியை உயிரோடு ஆற்றுக்குள் வீசிச் சென்ற சம்பவம் மனிதநேயத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
2. பிரசவத்துக்கு சென்ற போது துயரம் மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலி
பிரசவத்துக்கு சென்ற போது, மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் பலியாகினர்.
3. துணி துவைக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் பலி
வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
4. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
5. நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சி சென்ற போது பஸ் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.