மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் + "||" + Appointment of additional officers for counting of votes - Chief Electoral Officer Satyaprada Saku Information

வாக்கு எண்ணிக்கை பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

வாக்கு எண்ணிக்கை பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
தேர்தல் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனமிக்கப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட இருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடக்கூடிய தேர்தல் அலுவலர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்றாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதன்படி தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை பணிகளை நடத்துவதற்கு தற்போது 16,387 தேர்தல் அலுவலர்கள் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் அல்லது வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் அப்போது 98.6 என்ற அளவை விட உடல் வெப்பநிலை கூடுதலாக இருந்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளை மேற்கொள்ள தமிழகத்தின் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்த விவரங்கள் அனைத்தையும், ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடமும் தேர்தல் ஆணையம் தெரியப்படுத்தி இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
2. 4 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.
3. 4 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.
4. தமிழக சட்டசபை தேர்தல்: மாலை 4 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
மாலை 4 மணி நிலவரப்படி தமிழக சட்டசபை தேர்தல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
5. தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்கள் வாரியாக நிலவரம்
தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முன்னிலை விவரம் வருமாறு:-