மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் திருப்தி + "||" + The High Court is satisfied with the steps taken by the Election Commission for the counting of votes

வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் திருப்தி

வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றம் திருப்தி
வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவர், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. 

அதே சமயம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி(நாளை மறுநாள்) நடைபெற உள்ள நிலையில், கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்கு கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இவ்விறு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. 

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத அரசியல் கட்சியினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இந்த கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தலாம் என்றும் கருத்து தெரிவித்தது. 

இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது நோய் பரவலை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மே 2 ஆம் தேதியன்று, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை, வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை நாளன்று தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் சிறந்த நடவடிக்கைகள் எடுத்து தலைவர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மே 2 ஆம் தேதி பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என்பதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் கொரோனா பேரழிவு ஏற்படும் என தேர்தல் ஆணையமும். அரசும் கணிக்கத் தவறிவிட்டது -அலகாபாத் ஐகோர்ட்
தேர்தலால் கொரோனா பேரழிவுக்கான தாக்கம் ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணையமும். அரசும் கணிக்கத் தவறிவிட்டது என அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
2. கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
3. நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
நெல்லை அரசு என்ஜீனியரிங் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்தது.
4. 4 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.
5. 4 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.