தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + West Bengal reports 17,411 cases, 96 deaths and 13,932 discharges; active cases 1,13,624

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்காளத்தில் மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,28,366 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 96 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 11,344 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 13,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,03,398 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 1,13,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தை தாண்டியது
டெல்லியில் இன்று மேலும் 27,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மே.வங்கத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து
மேற்கு வங்காளத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று மேலும் 17,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.