தேசிய செய்திகள்

ஒடிசாவில் இருந்து இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2879 டன் ஆக்சிஜன் ஏற்றுமதி + "||" + So far 2879 tonnes of oxygen has been exported from Odisha to states including Tamil Nadu

ஒடிசாவில் இருந்து இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2879 டன் ஆக்சிஜன் ஏற்றுமதி

ஒடிசாவில் இருந்து இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2879 டன் ஆக்சிஜன் ஏற்றுமதி
ஒடிசாவில் இருந்து இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2879 டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
புவனேஸ்வர்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்தவகையில் ஒடிசாவில் இருந்து இதுவரை 153 டேங்கர்களில் 2,879.082 டன் மருத்துவ ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. இவை பெரும்பாலும் ரூர்கேலா, ஜாஜ்பூர், தேன்கனல் மற்றும் அங்குல் மாவட்டங்களில் இருந்து மாநில போலீசாரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. 

இதில் 49 டேங்கர்கள் ஆந்திராவுக்கும், 41 டேங்கர்கள் தெலுங்கானாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அரியானா 13, தமிழ்நாடு 3, மராட்டியம் 6, சத்தீஷ்கார் 8, உத்தரபிரதேசம் 13, மத்திய பிரதேசம் 20 டேங்கர்கள் என மேலும் பல மாநிலங்களும் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் பெற்றிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக 2-வது முறையாக சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 3 லாரிகள்
ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்கு வசதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து 2-வது முறையாக சிறப்பு ரெயில் மூலம் 3 லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.