தேசிய செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் + "||" + Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has recovered from a corona infection

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
லக்னோ,

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துடன் தொடர்பில் இருந்த சில அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆதித்யநாத்தும் கடந்த 13-ந் தேதி முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

மறுநாள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் வீட்டிலேயே சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.

இதன் பலனாக அவருக்கு தற்போது கொரோனா குணமடைந்துள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில், ‘உங்களின் (மக்கள்) நல்வாழ்த்துகளினாலும், டாக்டர்களின் கவனிப்பாலும் தொற்றில் இருந்து நான் மீண்டுள்ளேன். உங்களின் ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துதலுக்காக நன்றி’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
3. கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
4. மேலும் 3.57 லட்சம் பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.
5. புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.