தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வர போர்க்கப்பல்கள் விரைந்தன + "||" + Warships rushed to bring in oxygen from abroad

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வர போர்க்கப்பல்கள் விரைந்தன

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வர போர்க்கப்பல்கள் விரைந்தன
ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் டேங்கர்களை கொண்டு வரும் பணியில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆக்சிஜனை எடுத்துச் செல்ல தேவையான காலி டேங்கர்கள், வெளிநாடுகளில் இருந்து இந்திய விமானப்படை சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

இந்தநிலையில், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் டேங்கர்களை கொண்டு வரும் பணியில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, பஹ்ரைன், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.

ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். தல்வார் ஆகிய 2 போர்க்கப்பல்கள், பஹ்ரைன் நாட்டின் மனாமா துறைமுகத்தை சென்றடைந்தன. அங்கிருந்து 40 டன் திரவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு மும்பை திரும்பும். இதுபோல், தாய்லாந்துக்கு ஐ.என்.எஸ். ஜலஷ்வா போர்க்கப்பல் சென்றுள்ளது. சிங்கப்பூருக்கு ஐ.என்.எஸ். ஐராவத் போர்க்கப்பல் புறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் இறக்குமதி சென்னை விமான நிலையத்தில் விரைவாக ‘டெலிவரி’ செய்ய நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் நேரடியாக தனியார் அமைப்புகள் சார்பில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கருவிகளை விமான நிலையத்தில் இருந்து உடனடியாக ‘டெலிவரி’ செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
2. வெளிநாடுகளில் இருந்து கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வந்தன - டெல்லி விமான நிலையம் தகவல்
வெளிநாடுகளில் இருந்து கடந்த 5 நாட்களில் 25 விமானங்களில் கொரோனா நிவாரண பொருட்கள் வந்தன என்று டெல்லி விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் உத்தரவு
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
4. வெளிநாடுகளில் இருந்து வரும் எல்லா பயணிகளையும் தனிமைப்படுத்த வேண்டும் - ஐகோர்ட்டில் வழக்கு
புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்துவதை கட்டாயமாக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.