தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு - சுகாதார மந்திரி தகவல் + "||" + Chance of Corona 3rd wave in July and August in Maharastra - Health Minister Info

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு - சுகாதார மந்திரி தகவல்

மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு - சுகாதார மந்திரி தகவல்
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை மக்களை வதைத்து வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் 3-வது கொரோனா அலைக்கும் வாய்ப்பு இருப்பதாக மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நிபுணர்கள் கூறுவதை பார்க்கும் போது மராட்டியத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 3-வது கொரோனா அலை ஏற்படலாம். மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்டவற்றில் தற்சார்புடன் இருக்க மராட்டியம் முயற்சி செய்து வருகிறது. மே இறுதியில் கொரோனா பாதிப்பு குறையலாம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜூலை, ஆகஸ்ட்டில் 3-வது அலை ஏற்பட்டால் அது மாநில நிர்வாகத்திற்கு உள்ள சவாலை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் 3-வது கொரோனா அலையை தடுக்க தடுப்பூசி போட்டு முடிக்கப்பட வேண்டும், என்றார்.

இதேபோல 3-வது அலை உருவானால் அதை எதிர்கொள்ள புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கவும், மருந்துகளை போதிய அளவு இருப்பு வைத்து கொள்ளவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 34,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 34,389பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 960- பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக இன்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலியாகியுள்ளனர்.
4. மராட்டியத்தில் இன்று 39,923- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 254- ஆக உள்ளது.
5. மராட்டியத்தில் மேலும் 46,781- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46, 781- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.