மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை + "||" + In Tamil Nadu, liquor was sold for Rs 292 crore in a single day through Tasmac yesterday

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஒரே நாளில் நேற்று ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று கடைகளில் கூட்டம் அலைமோதியது.  தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டும், ஞாயிற்று கிழமை ஊரடங்கை முன்னிட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இதனால், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வைக்க நேற்று திரளானோர் குவிந்து விட்டனர்.  தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ஒரே நாளில் நேற்று ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.  இதுதவிர, மதுரை- ரூ. 59.63 கோடி, கோவை- ரூ.56.37 கோடி, திருச்சி- ரூ.56.72 கோடி மற்றும் சேலம்- ரூ.55.93 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ 11 கோடிக்கு மது விற்பனை
புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
2. ரூ20¼ கோடிக்கு மது விற்பனை
முழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.20¼ கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
3. பாரில் நள்ளிரவில் மது விற்பனை; 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பாரில் நள்ளிரவில் மது விற்பனை; 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
5. மது விற்ற 11 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.