தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றை முறியடித்த புதிதாக பிறந்த குழந்தை + "||" + Newborn baby overcomes corona infection in Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றை முறியடித்த புதிதாக பிறந்த குழந்தை

உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றை முறியடித்த புதிதாக பிறந்த குழந்தை
உத்தர பிரதேசத்தில் புதிதாக பிறந்த குழந்தை கொரோனா தொற்றை முறியடித்து உள்ளது.
காசியாபாத்,

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று கொரோனா பாதித்த  தாயிடம் இருந்து தொற்று ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்து உள்ளது.

இதுபற்றி டாக்டர் கூறும்பொழுது, பிரசவத்திற்கு முன்பு தாய்க்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.  பிரசவம் முடிந்து வீட்டிற்கு சென்ற பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பிறந்த குழந்தைக்கு 8 நாள் ஆன நிலையில் தொற்று பரவி பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.  எனினும், 15 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்ததில் குழந்தை கொரோனா பாதிப்புகளில் இருந்து விடுபட்டு உள்ளது.

இதனால், குழந்தையை நாங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.  பிறந்து 22 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 15 நாட்களில் எதிர்ப்பு சக்தி கிடைத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளது.

எனவே, புதிதாக பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உடனடியாக உருவாகி, நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைத்து தொற்றில் இருந்து விடுபட்டு உள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்புகளை முறியடித்த 105 வயது முதியவர் மற்றும் அவரது 95 வயது மனைவி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளை முறியடித்து 105 வயது முதியவர் அவரது 95 வயது மனைவி குணமடைந்து உள்ளனர்.
2. தோனி, கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் விராட் கோலி சாதனையை பிரித்வி ஷா முறியடித்துள்ளார்.