தேசிய செய்திகள்

இந்தியாவில் நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை + "||" + Defence Minister Rajnath Singh today reviewed the efforts of the Ministry of Defence and the Armed Forces to support the civilian administration in the fight against the current COVID-19 situation: Ministry of Defence

இந்தியாவில் நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியாவில் நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது, மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான பொருள்களை இறக்குமதி, ஆக்சிஜன் தயாரிக்கும் இடங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர்களை கொண்டு செல்லும் பணிகளை இந்திய விமானப்படை செய்து வருகின்றது.

மேலும், நாடு முழுவதும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை ராணுவம் செய்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா பேரிடரை சமாளிக்க ஆயுதப் படைகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முப்படைகளின் தளபதிகள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இன்று மாலை ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார்.