தேசிய செய்திகள்

மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - சோனியா காந்தி அறிவுறுத்தல் + "||" + Time for govt to wake up and fulfill their duties': Sonia Gandhi asks Centre to evolve national policy to deal with COVID-19

மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - சோனியா காந்தி அறிவுறுத்தல்

மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் - சோனியா காந்தி அறிவுறுத்தல்
கொரோனா வைரசால் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என சோனியா காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது, மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஒரு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டார். அதில், அவர் கூறியதாவது:

நாட்டில் கொரோனா வைரசால் நிலவும் சூழல், மிகவும் மோசமாகி உள்ளது. கொரோனாவை வீழ்த்துவதற்கு, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், நாடு தழுவிய ஒரு யுக்தியை, மத்திய அரசு வகுக்க வேண்டும். 

மத்திய மற்றும் மாநில அரசுகள், விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தங்கள் கடமையை ஆற்ற வேண்டிய நேரம் இது. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை சரிசெய்ய வேண்டும். 

இந்த நெருக்கடி நிலை சீராகும் வரை, அவர்களின் வங்கி கணக்குகளில், குறைந்தபட்சம், 6,000 ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும். கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். 

போர்க்கால அடிப்படையில், ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.